Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பழைமை

Familiarity

பொருட்பால் · WealthKural 806 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 806

Tamil original

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

Read the sounds · Transliteration

Ellaikkan Nindraar Thuravaar Tholaivitaththum
Thollaikkan Nindraar Thotarpu

Understand the idea · English meaning

Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.

Connect it to life today · Modern meaning

A person who understands true friendship does not abandon a longtime friend just because the relationship has become difficult. When a friend loses a job or faces a crisis, stay supportive instead of disappearing.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.

Kalaignar

கலைஞர் : நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்