விருந்தோம்பல்
Hospitality
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
Read the sounds · Transliteration
Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi
Velaanmai Seydhar Poruttu
Understand the idea · English meaning
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.
Connect it to life today · Modern meaning
A household should not exist only to collect money and protect its own comfort. Its resources should also make it possible to welcome and help others. For example, a family may keep enough food and space to invite a neighbour, host a visiting relative, or support someone facing a difficult time.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.
Kalaignar
கலைஞர் : இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே