Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

புல்லறிவாண்மை

Ignorance

பொருட்பால் · WealthKural 845 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 845

Tamil original

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.

Read the sounds · Transliteration

Kallaadha Merkon Tozhukal Kasatara
Valladhooum Aiyam Tharum

Understand the idea · English meaning

Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.

Connect it to life today · Modern meaning

Pretending to know what you have not learned can make people doubt even the things you truly understand. If a student fakes expertise in a new subject, classmates may question their genuine work too.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.

Kalaignar

கலைஞர் : அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்