Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

புல்லறிவாண்மை

Ignorance

பொருட்பால் · WealthKural 850 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 850

Tamil original

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்.

Read the sounds · Transliteration

Ulakaththaar Untenpadhu Illenpaan Vaiyaththu
Alakaiyaa Vaikkap Patum

Understand the idea · English meaning

He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.

Connect it to life today · Modern meaning

A person who deliberately denies a truth supported by clear evidence may be treated as an outcast for rejecting what wiser people can see. Someone who dismisses a verified safety rule just to appear clever puts everyone at risk.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

Kalaignar

கலைஞர் : ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்