The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Atraal Aravarindhu Unka Aqdhutampu
Petraan Netidhuykkum Aaru
Understand the idea · English meaning
If (one’s food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.
Connect it to life today · Modern meaning
After a meal is digested, eat only the amount the body needs; moderation helps preserve a long life. For example, stopping when comfortably satisfied rather than stuffed is a simple daily practice.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
Kalaignar
கலைஞர் : உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்