Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பிரிவாற்றாமை

Separation unendurable

காமத்துப்பால் · LoveKural 1156 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1156

Tamil original

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.

Read the sounds · Transliteration

Pirivuraikkum Vankannar Aayin Aridhavar
Nalkuvar Ennum Nasai

Understand the idea · English meaning

If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.

Connect it to life today · Modern meaning

If he is hard-hearted enough to announce that he is leaving, I should not expect him to return and show tenderness. When someone says goodbye without concern for your pain, holding on to hope can only hurt more.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

Kalaignar

கலைஞர் : போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்