Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

தனிப்படர் மிகுதி

The Solitary Anguish

காமத்துப்பால் · LoveKural 1199 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1199

Tamil original

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு.

Read the sounds · Transliteration

Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu
Isaiyum Iniya Sevikku

Understand the idea · English meaning

Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.

Connect it to life today · Modern meaning

Even if the person I love shows me no affection, anything said about him still sounds sweet to my ears. When you still care about someone, even a small mention of them can feel comforting.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.

Kalaignar

கலைஞர் : என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்