குறிப்பறிவுறுத்தல்
The Reading of the Signs
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
Read the sounds · Transliteration
Kanniraindha Kaarikaik Kaamperdhot Pedhaikkup
Penniraindha Neermai Peridhu
Understand the idea · English meaning
Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.
Connect it to life today · Modern meaning
A person's beauty is made greater by a gentle, modest, and natural character. When meeting someone new, kindness and quiet dignity may leave a deeper impression than appearance alone.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.
Kalaignar
கலைஞர் : கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்