Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

பிறனில் விழையாமை

Not coveting another"s Wife

அறத்துப்பால் · VirtueKural 144 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 144

Tamil original

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்.

Read the sounds · Transliteration

Enaiththunaiyar Aayinum Ennaam Thinaiththunaiyum
Theraan Piranil Pukal

Understand the idea · English meaning

However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?

Connect it to life today · Modern meaning

However impressive or accomplished someone is, none of it means much if they don't stop to consider the harm before pursuing someone who's already committed elsewhere. Status doesn't excuse the choice. For example, a popular, talented person who pursues a committed friend's partner loses respect fast, no matter how admired they were before.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?

Kalaignar

கலைஞர் : பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்