Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

இன்னா செய்யாமை

Not doing Evil

அறத்துப்பால் · VirtueKural 311 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 311

Tamil original

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

Read the sounds · Transliteration

Sirappeenum Selvam Perinum Pirarkku
Innaa Seyyaamai Maasatraar Kol

Understand the idea · English meaning

It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

Connect it to life today · Modern meaning

A good person will not hurt others even to gain wealth, status, or a more comfortable life. Success bought with someone else's suffering is not true greatness. For example, taking credit for a coworker's work may bring a promotion, but it damages both fairness and trust.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

Kalaignar

கலைஞர் : மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்