Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெரியாரைத் துணைக்கோடல்

Seeking the Aid of Great Men

பொருட்பால் · WealthKural 448 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 448

Tamil original

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.

Read the sounds · Transliteration

Itippaarai Illaadha Emaraa Mannan
Ketuppaa Rilaanung Ketum

Understand the idea · English meaning

The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.

Connect it to life today · Modern meaning

Without people who can point out mistakes, even an unopposed leader can destroy their own work. For example, a group leader who listens only to praise may miss a budget problem until the project fails.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

Kalaignar

கலைஞர் : குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்