பெரியாரைத் துணைக்கோடல்
Seeking the Aid of Great Men
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch
Aarpilaark Killai Nilai
Understand the idea · English meaning
There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.
Connect it to life today · Modern meaning
Effort cannot last without dependable support, just as a business cannot earn without some capital to begin with. For example, a community project needs committed people and basic resources if it is to continue after its first success.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.
Kalaignar
கலைஞர் : கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்