Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இடன் அறிதல்

Knowing the Place

பொருட்பால் · WealthKural 497 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 497

Tamil original

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்.

Read the sounds · Transliteration

Anjaamai Allaal Thunaiventaa Enjaamai
Enni Itaththaal Seyin

Understand the idea · English meaning

You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.

Connect it to life today · Modern meaning

Careful planning and a suitable setting can leave courage as the main support you need. For example, a well-prepared speaker can face a large audience without depending on constant help.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

Kalaignar

கலைஞர் : ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை