Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அரண்

The Fortification

பொருட்பால் · WealthKural 750 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 750

Tamil original

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.

Read the sounds · Transliteration

Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi
Illaarkan Illadhu Aran

Understand the idea · English meaning

Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.

Connect it to life today · Modern meaning

Even the strongest structure is useless if the people responsible for it cannot act well. Resources and good planning need capable people to turn them into protection and results. For example, a school may have excellent buildings and technology, but it will not help students if its staff cannot organize lessons and respond to problems effectively.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.

Kalaignar

கலைஞர் : கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது