Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பகைமாட்சி

The Might of Hatred

பொருட்பால் · WealthKural 863 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 863

Tamil original

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.

Read the sounds · Transliteration

Anjum Ariyaan Amaivilan Eekalaan
Thanjam Eliyan Pakaikku

Understand the idea · English meaning

In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.

Connect it to life today · Modern meaning

A fearful, ignorant, uncooperative, and ungenerous person becomes an easy target for opponents. For example, a leader who refuses advice and never helps others will quickly lose support in a crisis.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.

Kalaignar

கலைஞர் : அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்